Home CINEMA NEWS கடின உழைப்பும் விடாமுயற்சியும் தோற்காது தனது அண்ணன் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வனிதா..!!! என்ன...

கடின உழைப்பும் விடாமுயற்சியும் தோற்காது தனது அண்ணன் அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த வனிதா..!!! என்ன விஷயம் தெரியுமா?

arunvijay vanitha vijayakumar

வனிதா விஜயகுமார் மஞ்சுளா அவர்களின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பெரிய வரவேற்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தார்.

திருமண வாழ்க்கையில் பிரச்சினை குடும்ப பிரச்சினைகள் காரணமாக தனது குடும்பத்தை விட்டு தனியே இருந்து வரும் வனிதா விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய பிரபலத்தை அடைந்தார்.

வனிதா பற்றி எந்த ஒரு விஷயம் வந்தாலும் அது செய்தி ஆவது வழக்கமாக இருந்து வந்தது. வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் அதிலும் சில பிரச்சினைகள் இருந்ததால் பீட்டரை விவாகரத்து செய்துவிட்டு சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட வனிதாவிற்கு மேலும் பாப்புலாரிட்டி கிடைத்தது. ஒரு பட பாடலுக்கு குத்தாட்டம் போட அழைத்தார்கள். பட வாய்ப்புகள் அதிகரித்தது சமீபத்தில் கூட பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களுடன் வனிதா பிக்கப் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.

வெகு நாட்களாக தனது குடும்பத்தினருடன் பேசிக்கொள்ளாத வனிதா தனது அண்ணன் அருண் விஜயின் யானை திரைப்படம் இன்று வெளியாக இருப்பதால் தனது அண்ணனுக்கு வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் யானை அணிக்கு நல்வாழ்த்துக்கள் கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது என்று தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளது பயில்வான் ரெங்கநாதன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு…!!! கோபத்தில் ரசிகர்கள்.

யானை படத்தின் இயக்குனர் வனிதாவின் தங்கை ப்ரீத்தா அவர்களின் கணவர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version