Home CINEMA NEWS மதம் மாறியது பற்றி திடீரென ரகசியத்தை உடைத்த வனிதா…!!! வெளியான தகவல்.

மதம் மாறியது பற்றி திடீரென ரகசியத்தை உடைத்த வனிதா…!!! வெளியான தகவல்.

vanitha

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா விஜயகுமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்றார். சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பிரபலமாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சில தினங்களிலேயே பிரிந்தார். வனிதா பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக நடனம் ஆடினார். பிறகு அந்த நிகழ்ச்சியிலும் திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பிபி ஜோடிகளில் ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் செய்து வெளியேறி இருந்தார்.

தற்போது வனிதா சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அனல் காற்று, காத்து, தில் இருந்தா போராடு, கென்னி, பிக் அப் டிராப், அந்தகன், சிவப்பு மனிதர்கள், 2கே காதல் அழகானது என பல படங்கள் உள்ளன. தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்துகொண்டார். மன அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

தற்போது வனிதா மதம் மாறியது ஏன் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். அதன்படி சந்தோஷமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்வை வாழ தான் சில வருடங்களுக்கு முன் புத்த மதத்தை பின்பற்ற தொடங்கினேன். அதன்பின் அதைப்பற்றி மறுபரிசீலனை செய்ய எதுவும் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version