Home NEWS VANDE BHARAT சென்னை – திருநெல்வேலி ரயில் நேரம் மற்றும் கட்டண விவரங்கள் இதோ…!!!

VANDE BHARAT சென்னை – திருநெல்வேலி ரயில் நேரம் மற்றும் கட்டண விவரங்கள் இதோ…!!!

வந்தே பாரத் ரயில் முதன் முதலில் புதுடில்லி முதல் வாரணாசி வரை 2019ல் பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.


தற்போது தமிழகத்திலும் தொடங்கப்பட்டுள்ளது இந்த ரயில் சேவை. தமிழகத்தில் முதல் முதலாக சென்னை முதல் மைசூருக்கு பெங்களூரு வழியாக ரயில் சேவை தொடங்கப்பட்டது.

அதன் பின்னர் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏப்ரல் மாதம் பிரதமர் அவர்களால் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
தற்பொழுது வரும் செப்டம்பர் 24ஆம் தேதி (நாளை ) பிரதமர் மோடி அவர்களால் video conference வழியாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க உள்ளார்.

திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1.50க்கு சென்னை வந்தடையும்.

திருநெல்வேலியில் புறப்படும் ரயில் இடைப்பட்ட இந்த நிறுத்தங்களில் மட்டும் நிற்கும்.விருதுநகர் (காலை 7.13 மணி), மதுரை (காலை 7.50 மணி), திண்டுக்கல் (காலை 8.40 மணி), திருச்சி (காலை 9.50 மணி) மற்றும் விழுப்புரம் (காலை 11.54 மணி) மற்றும் தாம்பரம் (மதியம் 1.13 மணி).

மீண்டும் சென்னையில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி இரவு 10 .40 மணிக்கு சென்றடையும்.

சென்னையில் புறப்படும் ரயில் இடைப்பட்ட இந்த நிறுத்தங்களில் மட்டும் நிற்கும்.தாம்பரம் (மாலை 3.18 மணி), விழுப்புரம் (மாலை 4.39 மணி), திருச்சி (மாலை 6.40 மணி), திண்டுக்கல் (இரவு 7.56 மணி), மதுரை (இரவு 8.40 மணி) மற்றும் விருதுநகர் (இரவு 9.13 மணி).

வந்தே பாரத் ரயில் 652 .49 கிலோமீட்டரை அசால்ட்டாக 7 .50 மணி நேரத்தில் கடந்துவிடுகிறது.

அது மட்டுமல்லாது வந்தே பாரத் ரயிலில் உணவும் வழங்கப்படும் சேவைகளும் உள்ளது. வந்தே பாரத் ரயில் சேவையில் சென்னை முதல் திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் ஏசி சேர்கார் கிளாசுக்கு தனிநபர் ஒருவருக்கு ரூ.1,620 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,

டிக்கெட் முன்பதிவு செய்யும்போதை பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்படும். உணவிற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Exit mobile version