Home NEWS வண்ணாரப்பேட்டையில் 60 பைசாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா தொற்றால் மரணம்… கண்ணீரில் மக்கள்…

வண்ணாரப்பேட்டையில் 60 பைசாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா தொற்றால் மரணம்… கண்ணீரில் மக்கள்…

வண்ணாரப்பேட்டை மக்கள் மருத்துவர் பார்த்தசாரதி கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து அப்பகுதியை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவை சேர்ந்த மருத்துவர் பார்த்தசாரதி(84) . அவர் 1963இல் மருத்துவ படிப்பை முடித்தார். குழந்தை மருத்துவராக அவர் 60 ஆண்டுகளாக அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.

அவர் ஆரம்ப காலத்தில் 60 பைசாவில் துவங்கி தற்போது 50 ரூபாய் கட்டணம் வரை மருத்துவம் பார்த்து வந்தார். மருத்துவ பார்க்க வரும் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளையும் அவரே வழங்குவார். பணம் இன்றி வரும் நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்ப்பார். இந்நிலையில் 16ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரை காவேரி மருத்துவமனையில் குடும்பத்தினர் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தொடர் சிகிச்சையில் இருந்தவர் நேற்று உயிரிழந்தார். அதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு 2 நிமிடம் வீட்டில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு. பின் காசிமேடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு வடசென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாத காலத்திலேயே வருமானத்தை நோக்கமாக இல்லாமல் பார்த்தசாரதி மருத்துவ சேவை செய்து வந்தார். ஏழைத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் வட சென்னை மக்களுக்கு இவர் மருத்துவ சேவை மாபெரும் வரப்பிரசாதமாக இருந்தது.

Exit mobile version