Home CINEMA NEWS என் நண்பன் மாரடைப்பால் இறந்து விட்டான் விவேக்கை நினைத்து அழுத வடிவேலு..!!! கண்ணீருடன் உருக்கமான இரங்கல்...

என் நண்பன் மாரடைப்பால் இறந்து விட்டான் விவேக்கை நினைத்து அழுத வடிவேலு..!!! கண்ணீருடன் உருக்கமான இரங்கல் வீடியோ.

vadivelu mourned vivek death

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவேக் 4:45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று காலை எழுந்த உடனே மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாக இருந்தது. பலரை சிரிக்க வைத்த மனிதர் சத்தமில்லாமல் சென்று விட்டாரே என்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சில பிரபலங்கள் சூட்டிங் வெளிநாடுகளில் நடப்பதால் உடனடியாக வரமுடியாமல் வீடியோ மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பர் மற்றும் நகைச்சுவை ஜாம்பவானான நடிகர் வடிவேலு விவேக் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என் நண்பன் மாரடைப்பால் இறந்து விட்டான் என்ற செய்தி காலையில் செய்தி மூலமாக பார்த்து தெரிந்து கொண்டேன் அந்த செய்தியை கேட்ட உடனே எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு அதைப் பற்றி பேசவே முடியலை அவன் இல்லை என்று நினைக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. நானும் அவனும் நிறைய படங்கள் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அப்துல் கலாம் ஐயா கூட நெருக்கமாக இருப்பான் அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது போன்ற நல்ல விஷயங்களை பண்ணுவான். எனக்கு இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். அவனுக்கு நான் ரசிகன். என்னால நேரில் வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்த முடியல என் நெஞ்சார்ந்த இரங்கலை அவனுடைய குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கண்ணீருடன் நண்பன் விவேக்கை நினைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் வடிவேலு.

Exit mobile version