Home CINEMA NEWS ராஜா ராணி சீரியல் நடிகையுடன் TTF வாசனுக்கு திருமணமா ? அதிர்ச்சி தகவல்.

ராஜா ராணி சீரியல் நடிகையுடன் TTF வாசனுக்கு திருமணமா ? அதிர்ச்சி தகவல்.

சினிமா நடிகர், நடிகைகளுக்கு இணையான புகழை TTF வாசன் என்ற கோவையை சேர்ந்த இளைஞர் பெற்றுவருகின்றார். 2K கிட்ஸ்களிடம் மிகவும் பிரபலமடைந்த வார்த்தை TTF. யூடியூப்பில் அதிக பின்தொடர்பவர்கள் இவருக்கு இருந்தாலும் இவரது பிறந்தநாள் விழாவிற்கு பிறகு மிகவும் டிரெண்டிங்காக இருக்கிறார்.

யூடியூப் சேனலில் தொடர்ந்து டிராவல் Vlog வீடியோ பதிவிட்ட TTF வாசன் இன்று இணையத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் , ஆரம்பத்தில் சில நூறு சப்ஸ்க்ரைபர்கள் மட்டுமே இருந்த நிலையில் சில மாதங்களிலேயே அவரது சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. தற்போது அவரது Twin Throttlers யூடியூப் சேனலில் 2.74 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.

சங்கீதா ஒரு தமிழ் நடிகை மற்றும் மாடல், இவர் தொலைக்காட்சி தொடர்களில் இடம்பெற்றுள்ளார். அவர் ஸ்டார் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஜூலியாக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். அவர் தமிழும் சரஸ்வதியும் மற்றும் கல்யாண வீடு உள்ளிட்ட பிற சீரியல்களிலும் காணப்பட்டார். பிரபல யூடியூபரான TTF வாசனின் காதலி என கிசுகிசுக்கப்பட்ட சங்கீதா இணையத்தில் வைரலானார்.

ஆதாரங்களின்படி, பிரபல யூடியூபராக இருந்து நடிகர் டிடிஎஃப் வாசன் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். நடிகை தனது இன்ஸ்டாகிராமில் ஒரு அழைப்பிதழைப் பகிர்ந்துள்ளார், மணமகனின் பெயரை மறைத்து, ‘வி.’ என்று தொடங்கும் படங்கள் அது வாசன் என்று இணையத்தில் பரவுகின்றன.

இப்பொழுது சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது உண்மையான அழைப்பிதழை பதிவிற்றுள்ளார் அதில் ” v ” என்ற எழுத்திற்கு விக்னேஷ் என பதிவிற்றுள்ளார் யாரும் தேவையில்லாமல் வதந்திகளை பாரவ்திர்கள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.




Exit mobile version