Home NEWS திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 பேருக்கு கொரானோ ..!! அர்ச்சகரையும் சேர்த்து பாதித்துள்ளது..!!...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 பேருக்கு கொரானோ ..!! அர்ச்சகரையும் சேர்த்து பாதித்துள்ளது..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

உலகெங்கும் கொரானோ வைரஸ் ஒழிந்து வருகிறது, தற்போது இயல்பு நிலைக்கு அனைவரும் திரும்பி வருகின்றனர் என்ற செய்தியை பார்க்க தான் உலக மக்கள் அனைவரும் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கொரனோ நாளுக்கு நாள் அதன் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலும் அதன் பாதிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஆலையங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

அதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்த பட்டு வந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் மட்டும் கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் பரிசோதனை செய்து ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நாள் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று வந்த நிலையில் தற்போது பணியாற்றும் ஒரு அர்ச்சகர் உள்ளிட்ட 10 பேருக்கு கொரானோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக கோயில் மூடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version