Home CINEMA NEWS சிலம்பரசனுக்கு மேக்கப் போடும் TR..!! இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!!

சிலம்பரசனுக்கு மேக்கப் போடும் TR..!! இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்..!!

trajendar-makeup-simbu

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த இயக்குனர்களில் ஒருவர் டி ராஜேந்தர். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடி உள்ளன. ரஜினி கமலுக்கு இணையாக ஒரு தனி ரசிகர் கூட்டமே இவருக்கு உள்ளது. பெண்கள் ஆண்கள் என இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைத்தும் இவரது தீவிர ரசிகர்களாக இருந்துள்ளனர்.

இவரது கதைகளில் பெரும்பாலும் குடும்ப சென்டிமென்ட் அதிகம் இருப்பதால் இவர் படங்களை குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பது, இவர் இயக்கிய படங்களில் பாடல்கள் மிகவும் ஹிட். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சிலம்பரசன். தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் பிறந்ததில் இருந்தே தன் தந்தையுடன் சினிமா பயணத்தை தொடங்கி விட்டார்.

குழந்தை நட்சத்திரமாக இவர் 12 வருடங்கள் இருந்து வந்தார். அதன் பிறகு தன் தந்தை இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அதனை தொடர்ந்து கோவில், மன்மதன் குத்து போன்ற பல படங்களில் நடித்தார். அதன்பின் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார்.

சிம்புவிற்கும் டி ராஜேந்தர் இடையில் நல்லதொரு தந்தை மகன் பாசம் உள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசுவார்கள். மேலும் சிம்பு எப்பொழுதுமே எந்த பேட்டியிலும் தன் தந்தையை பற்றி கூறாமல் இருக்க மாட்டார். அதே போல் ராஜேந்தரும் எந்த நிகழ்ச்சியிலும் தன் மகனை பாராட்டாமல் இருக்க மாட்டார்.

இந்நிலையில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது டி.ஆர்.. தன் மகனுக்கு மேக்கப் போடும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Exit mobile version