Home CINEMA NEWS விவேக் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்…!!! நல்ல மனிதருக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! சந்தோஷத்தில்...

விவேக் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர்…!!! நல்ல மனிதருக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! சந்தோஷத்தில் ரசிகர்கள்.

vivek family requested accepted by tamilnadu cm mkstalin

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சில நாட்களுக்கு முன்பு விவேக் அவர்களின் குடும்பத்தினர் நேரில் சந்தித்த செய்தி சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது.

விவேக் அவர்களின் குடும்பத்தினர் முதல்வரிடம் என்ன பேசினாங்க முதல்வர் என்ன சொன்னாங்க என்று பலர் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அன்று மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்த விவேக் அவர்களை இன்றும் அவரது ரசிகர்கள் மறக்கவில்லை. தமிழில் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் தனது பணியை முடித்துக் கொள்ளாமல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ஆசையை நிறைவேற்ற பாடுபட்டார். கலாம் அவர்களுக்கு ஒரு கோடி மரங்கள் நாடு முழுவதும் நட வேண்டும் இதனை யாராவது பொறுப்பேற்று செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அந்த நேரத்தில் நடிகர் விவேக் அவர்களை கூப்பிட்டு இந்த சேவையை நீங்கள் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

அப்துல் கலாம் மீது அலாதி பிரியம் கொண்ட அவர் சொன்ன உடனே மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் கிரீன் கலாம் என்று ஒரு அமைப்பினைத் தொடங்கி பல இடங்களில் மரங்கள் நட தொடங்கினார். எந்த ஒரு கல்லூரி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் மரம் நடுங்கள் வருங்கால சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மரம் நடுங்கள் என்று அடிக்கடி கூறி வருவார்.

அப்பேர்ப்பட்ட நல்ல மனிதனை கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளார்கள்.

சமீபத்தில் தனது மகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விவேக் அவர்களின் மனைவி சந்தித்து கோரிக்கையையும் வைத்தார். தனது கணவர் விவேக் அவர்களின் பெயரை அவர் வசித்த தெருவின் சாலைக்கு வைக்க கூறி கோரிக்கை வைத்து இருந்தார்.

இன்று விவேக் அவர்களின் குடும்பத்தினர் முதல்வரிடம் வைத்த கோரிக்கையை தற்பொழுது நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விவேக் வசித்த தெருவின் சாலைக்கு விவேக் சாலை என்று விவேக் அவர்களின் பெயர் வைக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜூன் மூன்றாம் தேதி விவேக் அவர்களின் பெயரை அவர் வசித்த தெருவுக்கு வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version