Home CINEMA NEWS தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெற்றிப்படமா தோல்வி படமா…? உண்மை இது தான்- திருப்பூர் சுப்ரமணியன்.

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெற்றிப்படமா தோல்வி படமா…? உண்மை இது தான்- திருப்பூர் சுப்ரமணியன்.

tirupur subramanian about beast movie collection

தளபதி விஜய் படங்கள் என்றாலே மக்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும் விஜய் படங்கள் ரிலீசாகும் போது அவரது ரசிகர்கள் தியேட்டரில் அலங்காரம் செய்து முதல் ஷோ பார்த்த பின்பு தான் நிம்மதி அவர்கள் அந்த அளவிற்கு விஜய் மீது தீராத பிரியம் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் கேரள மக்களிடமும் உள்ளது.

ரஜினி படங்களை எப்படி வெளிநாடுகளில் பெரிய அளவில் வரவேற்று படத்தை ரசித்து பார்க்கிறார்களோ அந்த அளவிற்கு விஜய்யின் திரைப்படங்கள் வெளிநாடுகளில் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் இதனாலே ரஜினிக்கு அடுத்து பிசினஸ் செய்வது விஜய் தான். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு டாக்.

சமீபத்தில் வெளியான விஜய் படம் தான் பீஸ்ட் இந்த படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி இருந்தார். டாக்டர் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு திரையரங்கில் மக்களை கொண்டு வந்தது காரணம் அந்த படம் நகைச்சுவையாக இருந்ததால் ரசிகர்கள் திரும்பிப் பார்த்தார்கள் அதுபோல நெல்சன் விஜயை வைத்து ஒரு சீரியசான கதையில் அவருடைய அக்மார்க காமெடிகள் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது பீஸ்ட்.

படம் சீரியஸாகவே சென்றதால் படத்தில் பெரிய அளவில் ரசிக்கும்படி காட்சிகள் இல்லாமல் போனது விமர்சனங்களும் எதிர்மறையாக வந்தது. நெல்சனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் திட்டி கமெண்ட் செய்தனர். அந்த அளவிற்கு நெல்சன் மீது சற்று கோபமாக இருந்தார்கள் விஜய் ரசிகர்கள் காரணம் விஜய் போல ஒரு பெரிய ஹீரோவை சரியாக கையாளாமல் விட்டு விட்டாரே என்று பெரிய வருத்தம் விஜய் ரசிகர்களுக்கு இன்றும் உண்டு.

பீஸ்ட் திரைப்படத்தை டிஸ்ட்ரிபூட் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கூறிய பின்னும் திரைப்படம் தோல்விப்படம் என்று இணையத்தில் பிற நடிகர்களால் கூறப்பட்டு வந்தது. உதயநிதி ஸ்டாலின் பீஸ்ட் படத்தின் கலெக்ஷன் எனக்கும் சன் பிக்சர்ஸ் இருவருக்கும் நன்றாகவே தெரியும் பீஸ்ட் திரைப்படம் கமர்சியல் பெரிய ஹிட் படம் என்று ஏற்கனவே கூறி வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு திரைப்பட டிஸ்ட்ரிபியூட்டர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படம் என்கிறார்கள் அதில் 90% திரைப்படம் கலெக்ட் செய்து விட்டது அப்போது பீஸ்ட் திரைப்படம் வெற்றி திரைப்படம் தான் அது எப்படி தோல்வி திரைப்படமாக விஜய்க்கு இருக்கும் பீஸ்ட் பெரிய வெற்றி திரைப்படம் தான் என்று உறுதி செய்தார்.

Exit mobile version