Home NEWS தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியுள்ள தமிழக முதல்வர்...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

mk stalin offers jobs to gun shoot family thoothukudi

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மே 22 2018 ஆம் ஆண்டு நடந்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர் தூத்துக்குடியில் ஏராளமான காவலர்களை குவித்து இருந்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். போராட்டத்தின்போது காவலர்கள் போக்குவரத்து தடைகளை உடைத்ததாலும், காவலரின் கோரிக்கையை ஏற்காமல் காவலரை தாக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.

அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 102 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். துப்பாக்கி சூடு நடத்தி இருக்க கூடாது என்று மக்கள் குரல்கள் எழுப்பத்தொடங்கினர். துப்பாக்கி சூட்டில் பல அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்பின் ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் வைத்தனர்.

நாளையுடன் மூன்று வருடங்கள் இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில் தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்கள் துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுத்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை மதுரை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார்.

Exit mobile version