Home CINEMA NEWS பல வருடங்களுக்கு முன் எனக்கும் ஜெயலலிதாவிற்கு இது தான் பிரச்சனை மனம் திறந்த ரஜினிகாந்த்..!!!

பல வருடங்களுக்கு முன் எனக்கும் ஜெயலலிதாவிற்கு இது தான் பிரச்சனை மனம் திறந்த ரஜினிகாந்த்..!!!

உலகமே ஒரு பெண்ணைப் பார்த்து மரியாதை கொள்ளும் என்றால் அது மறைந்த அம்மையார் ஜெயலலிதா தான். ஒரு இரும்பு பெண்மணி என்று கூறும் அளவிற்கு அரசியலில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர் ஜெயலலிதா. புரட்சித்தலைவி, அம்மா என மக்களால் புகழ் சூட்டப்படுபவர் மறைந்த ஜெயலலிதா.

அம்மையாரின் 75 வது பிறந்தநாள் இன்று. அவரின் தொண்டர்கள் பலரும் அவர் உருவப்படத்திற்கும் உருவ சிலைக்கும் மாலையிட்டு பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவர் முதலமைச்சர் ஆக இருந்தபோதும் சரி சினிமாவில் இருந்த போதும் சரி, அவருக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர்.

இன்று வரை பல துறையில் உள்ள பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாக உள்ளவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி பல தலைவர்கள் அரசியல் பிரபலங்கள் நடிகர்கள் வாழ்த்து கூறும் வகையில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு ஒரு வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜெயலலிதா என்று சொன்னாலே அவரது கடின உழைப்பும் சினிமாவில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதும் , பிறகு அரசியலுக்காக உழைத்து எம்ஜிஆருக்கு பிறகு அதிமுக கட்சியை மாபெரும் கட்சியாக மாற்றி அவர் செய்த புரட்சியும் என் நினைவுக்கு வருகிறது. எனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்தது உண்மைதான்.

ஆனால் அந்த மனக்கசப்பை எல்லாம் மறந்து என் பெண் திருமணத்திற்கு அவரை அழைத்த பொழுது எந்த மனக்கசப்பும் இல்லாமல் அந்த கருணை உள்ளத்தோடு திருமணத்திற்கு வந்தார் என்று உருக்கமான வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version