Home NEWS அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இரண்டே ஆண்டுகளில் இடிந்து விழும் அவலம்…!!!

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு இரண்டே ஆண்டுகளில் இடிந்து விழும் அவலம்…!!!

building

புளியந்தோப்பில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் ஒரு வருட காலத்திற்குள் வலுவிழந்த குடியிருக்க மக்கள் வாழ முடியாமல் மக்கள் ஓட்டம் பிடித்து அச்சமடைந்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கிருந்த மக்களை வெளியேற்றிவிட்டு 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 17 மாதங்களில் ரூ. 112.16 கோடி செலவில் ஏ பி சி டி என 4 பிளாக்குகளில் 864 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த 9 அடுக்கு மாடி குடியிருப்பில் லிப்ட் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதே போன்று அதே இடத்தில் 2019ஆம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை 18 மாதங்களில் ரூ.139.13 கோடி செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன. இவை இரண்டும் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று அதிகமிருந்த நேரத்தில் தற்காலிக மருத்துவமனைகளாக பயன்படுத்தப்பட்டன.

தற்போது தொற்று குறைந்து உள்ளதால் அந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த வீட்டின் கற்றுசுவர், பில்லர், படிக்கட்டுகள் இவை அனைத்தும் பெயர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆன கட்டிடம் போல் உள்ளதாகவும் வீட்டில் ஒரே ஒரு ஆணி கூட அடக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் வீட்டின் உள்ளே படுப்பதற்கு பயந்து வெளியே வந்து படுத்து உறங்குவது ஆகவும் ஒரு வருடத்திற்குள் இந்த நிலைமை என்றால் இன்னும் சில ஆண்டுகள் சென்ற பிறகு இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு நிலை எப்படி இருக்கும் என்பதை எங்களால் யூகித்து பார்க்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. மீதமுள்ள வீடுகள் இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. எனவே வீடுகளை கட்டி அதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும் அதன் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய பிறகே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version