Home CINEMA NEWS இயக்குனர் ஆனார் தளபதி விஜயின் மகன் அதிகாரபூர்வ தகவல் இதோ…!!! வாரிசு எண்ட்ரியால் குஷியான ரசிகர்கள்.

இயக்குனர் ஆனார் தளபதி விஜயின் மகன் அதிகாரபூர்வ தகவல் இதோ…!!! வாரிசு எண்ட்ரியால் குஷியான ரசிகர்கள்.

thalapathy vijay son jason sanjay

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக கொடிகட்டி பறப்பவர் தான் தளபதி விஜய். விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ அதுபோல வெளி மாநிலங்களிலும் பெரிய வரவேற்பு இருக்கும். குறிப்பாக விஜய் திரைப்படம் என்றால் வெளிநாடுகளில் ரஜினி திரைப்படங்களுக்கு இணையாக பிசினஸ் செய்யும் ரஜினிக்கு பிறகு சினிமாவில் வசூல் சக்கரவர்த்தி யார் என்றால் கண்டிப்பாக விஜய் தான் என்று கூறுவார்கள் சினி வட்டாரத்தினர்.

ஏன் ரஜினியின் சில பட வசூல்களை அசால்டாக முறியடித்து உள்ளது விஜய் பட வசூல். விஜய் அவர்கள் தனது மகனை வெளிநாட்டில் டைரக்ஷன் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க வைத்து வந்தார் அதன் பின் சிறு சிறு குறும்படங்களை எடுத்து வந்த விஜயின் மகன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாக போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது.

பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் விஜயின் மகனுக்காக ஒரு கதை ரெடி செய்து கொண்டு போய் விஜயின் வீட்டுக்கு சென்றாராம் ஆனால் சஞ்சீவ் என்னை கொஞ்ச நாட்கள் FREEYA விடுங்க அப்புறம் என்ன செய்யலாம் என்று நான் முடிவு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். விஜய்க்கு தனது மகனை நடிகனாக பார்க்க ஆசை இருந்தாலும் மகனின் முடிவு தான் தன்னுடைய முடிவு என்று அமைதியாக இருந்து விட்டார்.

தற்பொழுது தளபதி விஜயின் மகன் அவர்கள் இன்று இயக்குனராக தனது முதல் படியை எடுத்து வைத்துள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது விஜயின் மகன் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக போகிறார் என்ற செய்தி கிடைத்த உடனே தளபதி விஜய் ரசிகர்கள் வாரிசு வந்துவிட்டார் என்று இப்பவே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்தை லைக்கா தயாரிப்பில் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. நிறுவனத்திற்கு படம் இயக்கி தருவதாக AGREEMENT போட்டுவிட்டார் விஜயின் மகன் ஜேசன் விஜய்.

விஜயின் மகன் இயக்க இருக்கும் திரைப்படத்திற்கு யார் ஹீரோ ஹீரோயின் என்ற செய்திகள் விரைவில் வெளிவரும் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே சஞ்சய் சிறு வயதில் வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜயுடன் நான் அடிச்சா தாங்கமாட்ட பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version