Home CINEMA NEWS நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒன்றாக விஜய் பிரகாஷ் ராஜ்…!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!!

நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒன்றாக விஜய் பிரகாஷ் ராஜ்…!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!!

thalapathy vijay gilli pair

தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இன்றுவரை கில்லி போல ஒரு திரைப்படம் விஜய்க்கு அமையாதா என்று ஏங்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு கில்லி திரைப்படம் விஜய்யின் வாழ்வில் மறக்க முடியாத திருப்பத்தை கொடுத்தது.

கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்து அசத்தியிருந்தார் குறிப்பாக அவர் பேசும் செல்லம் என்கிற டயலாக் பெரிய அளவில் அந்த நேரத்தில் ட்ரெண்ட் ஆனது.

முத்துப்பாண்டி என்ற கதாபத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார் மனிதர். பிரகாஷ்ராஜ் அந்த படத்தில் ஒரு ஜாலியான வில்லத்தனத்தை காட்டியிருப்பார்.

விஜயின் சிவகாசி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்து அசத்தியிருப்பார் பிரகாஷ்ராஜ். போக்கிரி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக அலிபாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் பிரகாஷ்ராஜ். அதன்பின் பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜயின் வில்லு படத்தில் நயன்தாராவிற்கு தந்தையாக நடித்திருப்பார். வில்லனாகவும் அந்தப் படம் விஜய்யின் கேரியரில் பெரிய தோல்வியை சந்தித்தது.

அதன்பின் பிரகாஷ்ராஜ் விஜய் இணைந்து நடிக்கவில்லை பிரபுதேவா இயக்கத்தில் தற்பொழுது விஜயின் 66வது திரைப்படத்தை இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கி வருகிறார் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் அதுமட்டுமல்ல சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா கிரிஷ், யோகி பாபு, பிரபு போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் வில்லு படத்திற்குப் பிறகு பிரகாஷ் அவர்கள் விஜயுடன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் என்ன கதாபாத்திரமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவரும் இந்த நேரத்தில் விஜயும் பிரகாஷ் ராஜும் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை பிரகாஷ் ராஜ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு செல்லம் yes we are back என்று கூறியுள்ளார்.

Exit mobile version