Home CINEMA NEWS ஆள் அடையாளம் தெரியாத படி டாக்ஸியில் வந்த அஜித்..!!! யார் நீங்க என்று கேட்ட போலீசார்..!!!

ஆள் அடையாளம் தெரியாத படி டாக்ஸியில் வந்த அஜித்..!!! யார் நீங்க என்று கேட்ட போலீசார்..!!!

ajith with public

அஜித் தமிழ் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர். எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இல்லை அரசியல் பேசுவது இல்லை ஆனால் இந்த மனிதனுக்கு எப்படி இவ்வளவு ரசிகர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடமாகியும் இந்தப் படத்திற்கான அப்டேட் ஏதும் கிடைக்காததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். முதல்வர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் வலிமை அப்டேட் கேட்டனர் அஜித் ரசிகர்கள். அதையும் ஒரு படி தாண்டி சென்னை வந்த பிரதமர் மோடி சென்னையில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது வலிமை அப்டேட் கொடுங்க என்று கத்த தொடங்கினர்.

இந்த செயல்களை பார்த்த அஜித் தரப்பு அஜீத் காதுக்கு இந்த செய்திகளை கொண்டு செல்ல அஜித் உடனே அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் வலிமை படத்திற்காக அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம் சரியான நேரத்தில் அப்டேட் வரும் என்னுடைய ரசிகர்கள் யாரும் இது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார்.


நேற்று அஜித் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு திடீரென்று காலையில் டாக்ஸியில் வந்திருந்தார். கருப்பு நிற டீசர்ட் அரைக்கால் சட்டை மற்றும் தொப்பி அணிந்து கொண்டு ஸ்டைலாக கூலர் உடன் வந்து இருக்கிறார்.

அப்பொழுது அங்கிருந்த பாதுகாப்பு பிரிவு போலீசார் நீங்கள் யார் எங்கு செல்ல வேண்டும் யாரைப் பார்க்க செல்கிறீர்கள் அதற்கு முன் அனுமதி பெற்று இருக்கலாம் என்று கேள்வி கேட்கத் தொடங்கினார். அப்பொழுது முக கவசத்தை அகற்றிவிட்டு அஜித் நான் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக ரைபிள் கிளப்புக்கு செல்லவேண்டும் என்று அவர்களிடம் கூறினார்.


அதற்கு நீங்கள் தவறுதலாக வேப்பேரியில் உள்ள புது காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருக்கீங்க பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் ரைபிள் கிளப் நடந்து வருகிறது என்று பாதுகாப்பு பிரிவு போலீஸார் கூறியுள்ளனர். அதன்பின் அஜித்துடன் அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர் அதுமட்டுமல்லாமல் அங்கு கூடியிருந்த சில பொது மக்களும் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
தற்போது அஜித்தின் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Exit mobile version