Home NEWS எகிறும் கொரோனா எண்ணிக்கை ..!!! தமிழ்நாட்டில் 26 ம் தேதி வரும் புதிய கட்டுப்பாடுகள்..!!!...

எகிறும் கொரோனா எண்ணிக்கை ..!!! தமிழ்நாட்டில் 26 ம் தேதி வரும் புதிய கட்டுப்பாடுகள்..!!! விரைவில் ஊரடங்கா?

tamilnadu government new guidelines

நாடெங்கும் கொரோனா மீண்டும் பரவிவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைபிடிக்க உத்தரவிட்டது தமிழக அரசு. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் மட்டும் போதாது இன்னும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் மட்டுமே கொரோனா பரவலை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்று தமிழக அரசு தற்பொழுது சில கட்டுப்பாடுகளை வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை 4மணி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகளில் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், பார் கேளிக்கை விடுதிகள், பெரிய அரங்குகள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அதனை தொடர்ந்து அனைத்து நகராட்சிகள் நகராட்சிகளில் அழகு நிலையங்கள் சலூன்கள் இயங்க அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.

உணவகங்கள், தேனீர் கடைகளில் அமர்ந்து உணவை உன்ன அனுமதி இல்லை ஆனால் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி என்று அறிவித்துள்ளது.

அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

திருமணம் மற்றும் திருமண சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதனை சார்ந்த சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது அரசு.

உணவைத் டெலிவரி செய்யும் வேலை செய்பவர்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்க அறிவுறுத்தியுள்ளது அரசு.

என்று சில கட்டுப்பாடுகளை வருகின்ற 26 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு.

தற்போதைய சூழ்நிலையை கருதும் போது கட்டுப்பாடுகளை சரியாக கடைபிடித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம். ஊரடங்கு தேவை இல்லை. நிலைமை கை மீறி போனால் மட்டுமே ஊரடங்கை பற்றி சொல்ல முடியும் என்கிறார்கள் ஒரு சிலர்கள்.

Exit mobile version