Home NEWS திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று முதல் இபதிவு செய்யலாம்- தமிழக அரசு.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று முதல் இபதிவு செய்யலாம்- தமிழக அரசு.

wedding epass allowed in tamilnadu

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு தொடங்கியபோது மக்கள் நடமாட தொடங்கினார்கள் அதனால் சில நாட்கள் கழித்து தமிழக அரசு இப்பதிவு முறையை மறுபடியும் கொண்டு வந்தது.

மக்கள் காரணமின்றி வெளியில் வரக்கூடாது குறிப்பாக திருமணத்திற்கு அதிகமான நபர்கள் கூட கூடாது அதுபோல இறப்பு மற்றும் இறப்பை சார்ந்த காரியங்களுக்கு அதிக அளவில் கூட கூடாது என்று அறிவித்திருந்த தமிழக அரசு இபதிவு இணையதளத்தில் பதிவு செய்து முறையாக பதிவுக்கு அனுமதி பெற்றபின் வெளியில் செல்லலாம் என்று அறிவித்திருந்தது.

நேற்று இ பதிவு செய்யும் இணையதளத்தில் அதிக விண்ணப்பங்கள் வந்ததால் நேற்று திருமணத்திற்கான அனுமதி கொடுக்காத நிலையில் தற்பொழுது திருமணத்திற்கான அனுமதி இன்று சேர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திருமணத்திற்கான அனுமதி சேர்ப்பு இணையத்தில் தொடங்கி உள்ளது.

மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதன் நோக்கத்தில்தான் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளோம் அனைவரும் பாதுகாப்பாக இருந்து நலமுடன் வாழ வேண்டும் என்று கூறி வருகிறது அரசு தரப்பு.

Exit mobile version