Home NEWS அதிகமாக வசூலிக்கப்படுகிறதா மின்கட்டணம்..!! உண்மை நிலவரம் என்ன..?

அதிகமாக வசூலிக்கப்படுகிறதா மின்கட்டணம்..!! உண்மை நிலவரம் என்ன..?

தற்போதுள்ள சமயத்தில் அதிகமாக எழும் பிரச்சினைகளில் மின்கட்டண உயர்வும் ஒரு பிரச்சினை. இதை எப்படி தீர்வு கொள்வது என பலரும் குழம்பி போயுள்ளனர். மின் கட்டண உயர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். ஊரடங்கு காலகட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் கட்டணம் பல மடங்கு அதிகரித்து விட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மின்சார ஒழுங்குமுறை சட்டவிதிகளை பின்பற்றி கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த பிரச்சினைக்கு விளக்கமாக பதில் அளித்தது மின்வாரியம் இருப்பினும் அது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

உண்மை நிலவரம் என்ன தான் என்று ஒரு ஓய்வுபெற்ற மின் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை காலம் என்பதால் இயல்பாகவே இந்த மாதங்களில் மின் பயன்பாடு அதிகரித்து காணப்படும். மேலும் இந்த வருடம் நான்கு மாதங்களாக ஊரடங்கு என்பதால் பெரும்பாலானோர் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். அவர்கள் மின் விசிறி போன்ற பல பயன்பாடுகளை தொடர்ந்து உபயோகித்து வருகின்றனர்.

மேலும் முதலில் பயன் பயன்படுத்தப்படும் 100 யூனிட்டிற்கு எந்த கட்டணமும் கிடையாது. அதன் பிறகு ஒரு வீட்டில் சராசரியாக 200 யூனிட்டுக்கு உள்ளாகவே மின் பயன்பாடு இருந்தால் அவர்களுக்கு 101-வது யூனிட்டில் இருந்து ஒரு கணக்கீடு, 300 யூனிட்டுக்கு மேல் இருந்தால் அதற்கு மேல் ஒரு கணக்கிடும் கருதப்படுகின்றது. இதன் காரணமாகவே மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது 200 யூனிட் வரை ஒரு விலை, 300 யூனிட் வரை ஒரு விலை, 500 யூனிட் வரை ஒரு விலை என விதம் விதமாக கட்டண விகிதங்கள் மாறுபட்டுள்ளன. இதேசமயம் 500 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு உள்ளவர்களுக்கு இப்போதைய நடைமுறை எந்தவித தீங்கும் உண்டாகாது, ஏனெனில் 500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் மின்சாரத்தை 6.60 ரூபாய்தான் கட்டணம் இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version