Home NEWS தமிழக கொரோனா தடுப்பு நிவாரண நிதி தொகை நேற்று வரை இத்தனை கோடி வந்துள்ளதா..? நன்றி...

தமிழக கொரோனா தடுப்பு நிவாரண நிதி தொகை நேற்று வரை இத்தனை கோடி வந்துள்ளதா..? நன்றி தெரிவிக்கும் தமிழக முதல்வர்.

stalin thanks to people

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற முதல் நாள் போர்க்கால அடிப்படையில் கொரோனா பணிகளை முடுக்கி விட்டு மக்களின் உயிரைக் காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதிகளை வழங்கி வந்தார்கள்.

தமிழக முதல்வர் நிதி தேவைப்படுகிறது யாரேனும் கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம் என்று அறிவித்தவுடன் பல்வேறு நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் சாதாரணமாக தங்களது வாழ்க்கையை ஓட்டும் பொதுமக்கள் என அனைவரும் நன்கொடைகளை தமிழக முதல்வரிடம் வழங்க ஆரம்பித்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே இந்த நிதி பயன்படும் என்றும், நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்தார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து தடுப்பு பணிக்காக நிவாரண நிதி அனைவரும் வழங்கி வந்தனர். நேற்று 23 – 5 – 2021 வரை மொத்தமாக 181 கோடி ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தானாக முன்வந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

இதுவரை பெறப்பட்ட தொகையிலிருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டுவருவதற்காக தேவையான கன்டெய்னர்களை வாங்குவதற்காகவும் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆர் டி பி சி ஆர் பரிசோதனை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இப்பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்டிபி சிஆர் வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிய முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது கருத்தில் கொண்டு இந்த ஒரு வார காலத்தில் நன்கொடையாளர்கள் அனைவரும் நேரில் வந்து தன்னிடம் நன்கொடை அளிப்பது தவிர்க்குமாறும் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இணையவழியில் இந்த நன்கொடைகளை தொடர்ந்து அளிக்குமாறும் முதல்வர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இணையவழியாக நிதி அனுப்ப : https://ereceipt.tn.gov.in/cmprf/Cmprf.html

Exit mobile version