Home NEWS நான் அரசு அலுவல் பணிக்காக பிற மாவட்டங்களுக்கு ஆய்வு செல்ல இருக்கிறேன் கழகத்தினர் என்னை சந்திக்கவோ...

நான் அரசு அலுவல் பணிக்காக பிற மாவட்டங்களுக்கு ஆய்வு செல்ல இருக்கிறேன் கழகத்தினர் என்னை சந்திக்கவோ அல்லது வரவேற்பு கொடுக்கவோ கூடாது – தமிழக முதல்வர் ஸ்டாலின்.

stalin dmk

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. மக்கள் நலனுக்காக ஊரடங்கு பிறப்பித்தது அரசு.

மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது அதேநேரத்தில் மக்களின் உயிரை காக்கும் பணி அரசுக்கு இருப்பதால் காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கான இயங்கலாம் என்று அறிவித்திருந்தது அரசு.

முகக் கவசம் அணியுங்கள் தனி நபர் இடைவேளையை கடைபிடியுங்கள் என்று அரசு அறிவித்து வந்தாலும் மக்கள் சிலர் கொரோனாவின் தாக்கத்தைப் பற்றி அறியாமல் அலட்சியமாக இருப்பதால் ஊரடங்கு விதிகளை வலுப்படுத்தி கூறி இ-பதிவு முறையை அரசு அமல்படுத்தி இருந்தது அதனை தொடர்ந்து திருமணம் மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு கூட்டம் கூட வேண்டாம் என்று அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ளார்.

தன்னைப் பார்க்க கட்சி தொண்டர்கள் குவிந்துவிடுவார்கள் என்று எண்ணிய முக ஸ்டாலின் அவர்கள் இது முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்ட பணி என்பதால் கழகத்தினர் என்னை சந்திக்கவோ வரவேற்பு கொடுக்க முயற்சிக் செய்ய கூடாது என்று முன்னதாகவே கூறியுள்ளார் அனைவரும் நலன் மிக முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version