Home NEWS தன் உயிரை பணயவைத்து 36 பச்சிளங்குழந்தைகளை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய செவிலியரை நேரில் அழைத்து...

தன் உயிரை பணயவைத்து 36 பச்சிளங்குழந்தைகளை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய செவிலியரை நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர்..!!! குவியும் பாராட்டுக்கள்.

kasthooribha hospital chennai

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனையில் போன மாதம் 26 தேதி மின்கசிவு காரணத்தினால் மருத்துவமனை அறை தீ பிடித்து எரிந்தது.

அந்த நேரத்தில் 36 பச்சிளம் குழந்தைகள் இன்குபேட்டரிலும், 11 குழந்தைகளுடன் தாய்மார்களும் மொத்தம் 47 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

திடீரென ஏற்பட்ட மின் கசிவினால் தீ பரவ ஆரம்பித்தது அப்பொழுது செவிலியர் ஜெயக்குமார் அவர்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு உள்ளே சென்று Fire extinguishers
கொண்டு குழந்தைகள் மற்றும் தாய்மார்களை உயிருடன் மீட்டு உள்ளார்.

தீயணைப்புத்துறை வீரர்கள் வரும்வரை காத்திருக்காமல் குழந்தைகளையும் தாய்மார்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் செய்த வீர செயலை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவருடைய முயற்சியால் தான் 36 பச்சிளங்குழந்தைகள் அன்று காப்பாற்றப்பட்டது இதை அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் செவிலியர் ஜெயக்குமார் அவர்களை இன்று நேரில் அழைத்து அவரைப் பாராட்டியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Exit mobile version