Home NEWS வாழ்த்துக்கள் தாத்தா சைக்கிள் வாங்கிக் கொடுத்ததுக்கு நன்றி முதல்வர் ஸ்டாலினிடம் உரையாடிய சிறுவன்..!!!

வாழ்த்துக்கள் தாத்தா சைக்கிள் வாங்கிக் கொடுத்ததுக்கு நன்றி முதல்வர் ஸ்டாலினிடம் உரையாடிய சிறுவன்..!!!

tamilnadu cm stalin gift bicycle to kid

உலகமெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இந்நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது தற்போது மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ தீபா தம்பதியின் மகன் ஹரிஷ் வர்மன் வயது 7 இந்தச் சிறுவன் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சிறுக சிறுக பணத்தை சேமித்து வந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ள நிலையில் தான் சேமித்து வைத்துள்ள பணத்தை தமிழக அரசு கொரோனா பாதிப்பு முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு அந்தத் தொகையை வழங்கியுள்ளார் இதற்கு பல்வேறு தரப்பினரும் அச்சிறுவனுக்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த சிறுவனின் செயலைக் கண்டு வியந்து சிறுவனுக்கு புதியதாக சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் அதைப்போல் அந்த சிறுவனுக்கு தொலைபேசியில் வாயிலாக உரையாடி உள்ளார் அந்த உரையாடலின் போது கவனமாக சைக்கிள் ஓட்டும் படியும், கொரோனா முழு ஊரடங்கு முடிந்தவுடன் சைக்கிளை வெளியே எடுத்து சென்று ஓட்டும் படியும் அன்பாக பேசியுள்ளார் அந்தச் சிறுவன் சைக்கிள் வாங்கி கொடுத்ததுக்கு நன்றி தாத்தா என்று மழலை மொழியில் உரையாடியுள்ளார் அந்த சிறுவன்.

இந்த சம்பவத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Exit mobile version