Home NEWS PPE KIT அணிந்து கொண்டு கொரோனா நோயாளிகளை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!!!

PPE KIT அணிந்து கொண்டு கொரோனா நோயாளிகளை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்..!!!

mk stalin visits corona ward

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற சில நாட்களுக்கு முன்பே கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார துறையை வீட்டிற்கு வர வைத்து நோயின் தாக்கத்தைப் பற்றியும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற நாளில் கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் 4000 ரூபாய் உதவித் தொகையாக கொடுக்க முதல் கையெழுத்திட்டார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வாங்கிய புகார்களை தனி குழு ஒன்று நியமித்து கண்காணித்து வரும் அவர் தற்போது தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனையே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தான் அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்தாக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் சில இடங்களுக்கு சென்று கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் எப்படி நடக்கிறது என்பதை ஆய்வு செய்து வரும் அவர். இன்று கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மருத்துவமனைக்குள் வந்ததும் PPE KIT அணிந்து கொண்டு மருத்துவர்களை அழைத்துக்கண்டு ஆய்வு செய்த ஸ்டாலின் அங்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இது குறித்து ஸ்டாலின் கூறியது கொரோனா வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன் இப் பெருந்தொற்றை நாம் வெல்வோம் என்று கூறியுள்ளார்.

மருந்தோடு சேர்த்து மற்றவர்களை ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயை குணப்படுத்தும் தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் PPE kit அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்தது மக்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version