Home NEWS மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு.

cm relief fund

கொரோனா நாடு முழுவதும் பரவி மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை கடைபிடித்து வருகிறார்கள். ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை அறிந்த தமிழக அரசு குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தது. 500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் கொடுத்தார்கள். கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் பொருட்களை இவசமாக கொடுத்து வந்த அரசு. தொழிலார்கள் நலம் கருதி தொழிலாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்த அணைத்து தொழிலாளிகளுக்கும் உதவி தொகையாக 2000 ரூபாய் கொடுத்தார்கள்.

தற்பொழுது மாற்றுதிறனாளிக்கான உதவி தொகையை அறிவித்து உள்ளனர். அடையாள அட்டை வைத்து உள்ள 13 .35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் நிவாரண தொகையாக 1000 வழங்கப்படுமென்று அறிவித்து உள்ளனர்.

Exit mobile version