Home NEWS விபத்தில் சிக்கிய 13 வயது சிறுவனுக்கு இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48...

விபத்தில் சிக்கிய 13 வயது சிறுவனுக்கு இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் மூளையில் அறுவை சிகிச்சை…!!! நலம் விசாரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.

inniyur kappom mkstalin

சாலை விபத்தினால் பரிதாபமாக உயிரிழப்பவர்களை காப்பதற்காக இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருந்தார்.

நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி அவர்களது 13 வயது மகன் வர்ஷாந் (13 -1 – 2022 ) அன்று பொங்கல் திருநாளுக்கு பயன்படுத்தும் பூலப்பூவை விற்றுவிட்டு தனது தாய் தந்தையுடன் இரண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார் வீடு திரும்பும் நேரத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது.

அப்போது நடந்த விபத்தில் தாய் தந்தை இருவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை ஆனால் மகன் வர்ஷாந்த்கு தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அப்போது அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறுவன் வர்ஷாந்த்கு சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளர்கள்.

சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு அறிவித்த இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார்கள். சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கையில் அந்த சிறுவனுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ரத்தக் கசிவும் மூளை அழுத்தமும் அதிகமானதால் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சிறுவன் வர்ஷாந் மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது அந்த சிறுவன் நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அந்த சிறுவனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்தார் தம்பி நான் ஸ்டாலின் பேசுறேன் நல்லா இருக்கீங்களா வழி இருக்குதா தைரியமா இரு என ஆறுதல் கூறியதோடு எப்படி இந்த விபத்து நடந்தது என்னென்ன மருந்துகள் கொடுத்து இருக்கிறார்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றி தொலைபேசி வழியாக கேட்டறிந்தார். அந்த சிறுவனின் பெற்றோர் இன்னுயிர் காப்போம் திட்டம் உதவியாக இருந்ததாகவும் மகனை காப்பாற்றியதற்கு நன்றி என்று முதல்வரிடம் பேசினார்.

தமிழக முதல்வரின் இந்தத் திட்டம் சாலை விபத்தில் பாதிக்கக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் இந்த திட்டத்தில் மூலம் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

Exit mobile version