Home NEWS பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாஜக தமிழக எம் எல் ஏக்கள்..!!! தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி...

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாஜக தமிழக எம் எல் ஏக்கள்..!!! தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்ததாக தகவல்.

bjp mla meet prime minister modi

தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை வலுவான கட்சியாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார் பிரதமர் மோடி தமிழகத்தில் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு பாஜக சார்பில் முக்கிய பொறுப்புகளும் பதவிகளும் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக பாஜக மாநிலத் தலைவராக எல் முருகன் அவர்களை அறிவித்தார்கள். பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை அவர்களை அறிவித்திருந்தனர். அதிமுக கூட்டணி அமைத்து பாஜக வேட்பாளர்களை சில தொகுதிகளில் நிறுத்தி நினைத்தது போலவே வெற்றி பெற்றார் மோடி.

தமிழ்நாட்டில் இந்த தடவை டார்கெட் மிஸ் ஆகாது என்று ராஜதந்திரமாக அதிமுக கூட்டணியை கையில் வைத்துக்கொண்டு பாஜக வேட்பாளர்களை நிறுத்தி 4 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது பாஜக.

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று கூறியவர்கள் முன்னிலையில் 4 தொகுதிகளில் தாமரை மலர்ந்து விட்டது இனி தமிழ்நாடு முழுவதும் தாமரை மலரும் என்று கூறி வந்தார்கள் பாஜகவினர்.

சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாஜகவை எப்படியெல்லாம் கொண்டு செல்லலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் வெற்றி பெற்ற நாலு பாஜக எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு எல் முருகன் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இதுகுறித்து மோடி அவர்கள் ட்விட்டரில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான தங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டனர் இவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த வேல்முருகன் தமிழ்நட்டின் வளர்ச்சிக்கான நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நன்றி மரியாதைக்குரிய பிரதமர் ஐயா என்று கூறியுள்ளார்.

எது எப்படியோ ஒரு வழியாக பாஜகவை தமிழகத்திற்குள் கொண்டு வந்துவிட்டார் என்பதே உண்மை.

Exit mobile version