Home NEWS தமிழகத்தில் டாஸ்மாக் கடை இயங்கும் போது இதற்கு மட்டும் ஏன் தடை…!!! தமிழக...

தமிழகத்தில் டாஸ்மாக் கடை இயங்கும் போது இதற்கு மட்டும் ஏன் தடை…!!! தமிழக அரசை குற்றச்சாட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை.

Annamalai

நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடு விதிமுறைகளில் அடிப்படையில் பள்ளிகள் தொடங்க உள்ளன. பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிகள் திறக்கும் தமிழக அரசு முடிவு வரவேற்க வேண்டியதுதான். அதே சமயம் விநாயகர் சதுர்த்தி பேரணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆட்சியில் நாராயணசாமி எந்தவித திட்டத்தையும் நிறைவேற்றாமல் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார். தற்போது புதுச்சேரியில் பாஜக மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்தியாவில் பாஜகவின் உத்வேகம் கொண்டாடக்கூடிய வகையில் இருந்து வருகிறது. தற்போது 6 எம்எல்ஏக்கள் 3 நியமன எம்எல்ஏக்கள் என மொத்தம் 9 எம்எல்ஏக்கள் உடன் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறது.

வருகின்ற காலம் தமிழகத்தில் கூட மெல்ல மெல்ல ஆட்சியை பிடிப்போம் என்றார். கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில் பள்ளி கல்லூரிகள் திறக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனிமனிதர் விநாயகரை வழிபடலாம். சிலையை கடலில் கரைத்துக் கொள்ளலாம்.

ஆனால் கூட்டமாக சென்று ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்களிடம் விட்டுவிடுங்கள் அவர்கள் விதிமுறைகளை பின்பற்றி விழாவை சிறப்பாக நடத்திக் காட்டுவார்கள். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நம்முடைய வாழ்க்கை முறையில் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.

அதேபோல் டாஸ்மார்க் கடையை திறந்து அதிகமான மக்களை விடுகிறோம் அந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மட்டும் எதற்காக தடை செய்ய வேண்டும். அரசு கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சதுர்த்தி பேரணியை நடத்த அனுமதி தரவேண்டும். இதனை முதல்வரை சந்தித்து முறையிடலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் கட்சி நிர்வாகிகள் பெயரில் வீடியோ ஒன்று வெளிவந்தது. அதற்கு ஒரு குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Exit mobile version