Home NEWS மாற்றுத்திறனாளிக்கு அதிரடி சலுகையை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

மாற்றுத்திறனாளிக்கு அதிரடி சலுகையை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…!!!

MKStalin

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப் பேரவையில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளிக ளாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்த அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கவும் அறிவுறுத்தினார். அதன் பேரில், அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், இந்து சமய அறநி லயைத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்கிற விவரம்” தெரிவித்து கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version