Home CINEMA NEWS விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தை ஹிந்தியில் எடுக்கிறார் ஷங்கர்..!!! ஹீரோ யார் தெரியுமா..!!! வெளியான...

விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தை ஹிந்தியில் எடுக்கிறார் ஷங்கர்..!!! ஹீரோ யார் தெரியுமா..!!! வெளியான அதிகாரபூர்வ தகவல்.

shankar anniyan movie

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழில் இவருக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி. அந்த அளவிற்கு தனது படங்களில் பிரம்மாண்டத்தை கொடுப்பவர் சங்கர்.

காதல் கதையாக இருந்தாலும் சரி ஆக்ஷன் கதையாக இருந்தாலும் சரி அந்தப்படத்தில் பிரம்மாண்டமும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஒர்க் அதிகமாக இருக்கும். சொல்லப்போனால் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

நடிகர்கள் அனைவருக்கும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கனவாகவே இருக்கும் முன்னணி கதாநாயகர்கள் ரஜினி ,கமல், விஜய் விக்ரம் என அனைவரும் ஷங்கரின் இயக்கத்தில் நடித்து விட்டார்கள். தற்பொழுது சங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். லஞ்ச ஒழிப்பு பற்றி பேசப் போகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் ஷங்கர் அடுத்த கட்டமாக ஹிந்தியில் படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் சில நாட்களாக வந்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். சங்கர் ஹிந்தியில் விக்ரம் நடித்த அந்நியன் படத்தை ரீமேக் செய்கிறார் அதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார் இந்த அறிவிப்பை தமிழ் புத்தாண்டு தினத்தில் அறிவித்துள்ளார் ஷங்கர்.

ஏற்கனவே முருகதாஸ், ராகவா லாரென்ஸ் போன்ற தமிழ் இயக்குனர்கள் ஹிந்தியில் இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்து உள்ள நிலையில் பாலிவுட் ஷங்கர்காவது கை கொடுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version