Home CINEMA NEWS ஆணாக மாறிய தமன்னா..!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

ஆணாக மாறிய தமன்னா..!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

tamanna men getup

நடிகை தமன்னா தமிழில் ஒரு பெரிய மார்க்கெட் ஒரு நேரத்தில் வைத்திருந்தார். தமன்னாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த தயாரிப்பாளர்கள் பலர் மில்கி பியூட்டி என்று அழைக்கப்படும் தமன்னா தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தனது தாராள கவர்ச்சியால் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை தெலுங்கு சினிமாவிலும் பெற்றார்.

அதன்பின் பாலிவுட்டில் நடிக்க நினைத்த தமன்னாவிற்கு தொடர்ந்து மூன்று ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் லெஜெண்ட் திரைப்பட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.

சில வருடங்களாக இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதை தவிர்த்து வந்த தமன்னா அண்ணாச்சியின் லெஜெண்ட் படத்துக்காக மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்தார். தமன்னாவை பார்த்த ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். லெஜெண்ட் சரவணன் சாருக்கு நிறைய விளம்பரப் படங்களில் நடித்துக் கொடுத்து இருக்கிறேன் அவருக்கு வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

தற்பொழுது தமன்னா குறும்புத்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சேலையில் முதலில் இருக்கும் தமன்னா கதவை மூடி விட்டு வெளியே வரும்போது ஆணாக மாறி வருகிறார். தமன்னாவை ஆண் கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் அப்படியே அம்சமான பையன் போல இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version