Home NEWS கொரோனா விதிமீறல் செய்து ஆட்டோவில் சென்ற மூன்று அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் –...

கொரோனா விதிமீறல் செய்து ஆட்டோவில் சென்ற மூன்று அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக தமிழக தலைவர் எல் முருகன்.

l murugan about dmk ministers

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்தார் தமிழக பாஜக தலைவர் முருகன். நிவாரண பொருட்களை வழங்கியதோடு நீட் குறித்து அரசு குழப்புவதாகவும் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஆட்டோவில் பயணம் செய்த 3 அமைச்சர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நீட் தேர்வுக்கு மாணவ மாணவியர்களை அரசு தயார் செய்ய வேண்டும் அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டியது அரசின் கடமை. நீட் தேர்வு பற்றி அரசே மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பேசிய எல் முருகன் அவர்கள் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஒரே ஆட்டோவில் மூன்று அமைச்சர்கள் பயணம் செய்தார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் மறைந்த எம்எல்ஏ ஜெ அன்பழகன் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர்கள் காரில் தனித்தனியாக சென்றுள்ளார்.

அப்போது ஏற்பட்ட இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் நகராமல் ஊர்ந்து ஊர்ந்து சென்றது உடனே அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேகர்பாபு மற்றும் எம்பி தயாநிதிமாறன் மூன்று பேரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன் இணையத்தில் அமைச்சர்கள் ஆட்டோவில் செல்கிறார்களே என்று வைரலானது.

தற்பொழுது எல் முருகன் கொரோனா விதிமுறை மீறி ஆட்டோவில் பயணித்த அந்த மூன்று அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version