Home NEWS கைக்குழந்தையுடன் வாகனத்திற்காக நின்ற பெண்களை தன்னுடைய வாகனம் கொடுத்து வீட்டில் பத்திரமாக விட சொன்ன தாசில்தார்..!!!...

கைக்குழந்தையுடன் வாகனத்திற்காக நின்ற பெண்களை தன்னுடைய வாகனம் கொடுத்து வீட்டில் பத்திரமாக விட சொன்ன தாசில்தார்..!!! மனிதநேயத்தை பாராட்டி வரும் நெட்டிசன்கள்.

karnataka dhasilthar gave his official vehicle to drop womens

நாடெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்துக் கொண்டே போகும் இந்நிலையில் இந்தியாவில் சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர்.

மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று எளிதில் பரவ வாய்ப்புகள் உள்ளதால் சில வாரங்களுக்கு ஊரடங்கினை கடைபிடிக்க அந்தந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் முஸ்லிம் சகோதரிகள் தங்களது கைக்குழந்தையுடன் மருத்துவமனை அருகே தாங்கள் வீடு திரும்ப வாகனத்திற்கான நெடுநேரம் காத்திருந்தனர் அப்பொழுது அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தாசில்தார் அவர்கள் கைக்குழந்தையுடன் நின்ற அந்தப் பெண்களைப் பார்த்து எதற்காக இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு அந்தப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்து இருந்தோம் வீடு திரும்புவதற்காக வாகனத்திற்காக காத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள்.

உடனே தாசில்தார் இங்கு காத்திருக்க வேண்டாம் கைக்குழந்தை வைத்திருக்கிறீர்கள் என்று அவருடைய வாகனத்தை அனுப்பி அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக விடும்படி ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.

அதன்பின் கைக்குழந்தையுடன் அந்தப் பெண்கள் வாகனத்தில் ஏறி வீடு சென்றனர். தாசில்தார் செய்த மனிதாபிமான செயல் பலரிடம் பாராட்டுக்கள் பெற்று வருகிறது.

Exit mobile version