Home CINEMA NEWS கீர்த்தி சுரேஷால் நின்ற படப்பிடிப்பு ..!!! ஒரு வேலை அப்படி நடந்து இருந்தால் அண்ணாத்த தோல்வி...

கீர்த்தி சுரேஷால் நின்ற படப்பிடிப்பு ..!!! ஒரு வேலை அப்படி நடந்து இருந்தால் அண்ணாத்த தோல்வி அடைஞ்சிருக்கும் – ரஜினி

keerthy suresh rajini annaththe 50 days celebration

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது என்றாலே குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து அவருடைய நடிப்பை பார்த்து ரசித்து செல்வார்கள் மக்கள். இந்த வயதிலும் அவருடைய சுறுசுறுப்பான நடிப்பு, வசன உச்சரிப்பு, சண்டைக்காட்சிகளில் மென்கெடுவது என்று சூப்பர் ஸ்டார் ஸ்டாராக இன்றும் ஜொலித்து கொண்டு இருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் பேட் படத்துடன் விஸ்வாசம் என்ற அஜித் படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. விஸ்வாசம் படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பினை கொடுத்தார்கள் ரஜினியும் விஸ்வாசம் படத்தில் அப்படி என்ன இருக்கிறது மக்கள் இப்படி ஆதரவு தருகிறார்கள் என்று தயாரிப்பாளரிடம் படத்தை போட்டு காட்ட சொல்லியிருக்கிறார் முதல் பாதியை பார்த்த ரஜினி இந்தப்படம் மக்கள் கொண்டாடிய அளவுக்கு என்ன இருக்கிறது என்று யோசித்தாராம் அதன்பின் இரண்டாவது பாதியை பார்த்தபின் தன்னை அறியாமலேயே கண்கலங்கி கைதட்டினாராம் அந்த அளவிற்கு விஸ்வாசம் படம் ரஜினிக்கு பிடித்து இருந்தது.

விஸ்வாசம் படத்தை பார்த்த ரஜினி படக்குழுவினரை பாராட்டியதுடன் இயக்குனர் சிவா அவர்களை அழைத்து தனக்காக ஒரு படம் செய்ய கூறியுள்ளார் அந்த படம் தான் சமீபத்தில் வெளியான அண்ணாத்த.

தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் கிட்டத்திட்ட இன்றுடன் 50வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருப்பதால் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து நேரில் பாராட்டி அவர்களுக்கு தங்கச் சங்கிலியும் வழங்கி உள்ளார் ரஜினிகாந்த்.

படக்குழுவினரை பற்றி புகழ்ந்து தள்ளி உள்ள ரஜினி சமீபத்தில் அண்ணாத்த படம் உருவானது பற்றி கூறியிருந்தார்.

ரஜினி கூறியது :

அண்ணாத்த திரைப்படம் 50வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருப்பது பெருமகிழ்ச்சி இந்த படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு நடந்ததால் அனைவரும் முகக்கவசம் அணிந்து படப்பிடிப்பை நடத்தி வந்தோம் கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசிஸ்டன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது அதனை அவர் வெளிக்காட்டாமல் மூன்று நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷுக்கும் எனக்கும் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அப்போது கீர்த்தி சுரேஷ் அவர்களின் அசிஸ்டன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்து இயக்குனர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கொரோனா வைத்துக்கொண்டு எப்படி படப்பிடிப்புக்கு கலந்து கொண்டீர்கள் என்று கோபத்துடன் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

அதன்பின் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று கோவிட் டெஸ்ட் எடுத்தேன் நெகடிவ் வந்தது அதன் பிறகும் மருத்துவர்கள் நுரையீரல் பரிசோதனை செய்த பிறகு மறுபடியும் ஷூட்டிங்கு என்னை அனுப்பினார்கள். அதிலிருந்து மீண்டு வந்தது கடவுளின் செயல்.

மீண்டும் அனைவரும் கஷ்டப்பட்டு இந்த படத்தை உருவாக்கினார்கள். அண்ணாத்த திரைப்படம் வெளியானது விமர்சனங்கள் அனைத்தும் ரொம்ப சாதகமாக இல்லை. அண்ணாத்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் மழை . மழை என்றல் சாதாரண மழையல்ல அந்த மாதிரி மழையை பார்த்து ரொம்ப நாள் ஆயிருச்சு ஜனங்க நடமாடவே முடியல அதுக்கு அப்புறம் தியேட்டருக்கு எப்படி ஜனங்க வரது.

இது ரிலீஸாகி மூணு நாள் கழிச்சி மழை வந்தது. ஒரு வேலை தீபாவளிக்கு முந்தின நாள் மழை அப்படி பெய்து இருந்தால் நிச்சயம் இந்த படம் தோல்வி அடைந்திருக்கும். இது கூட ஆண்டவனோட அருள் தான். கலாநிதி மாறன் மற்றும் சிவா அவர்களின் மனசுக்கு எல்லாம் நல்லதா நடந்திச்சி.

மழை வராமல் இருந்திச்சின படம் இன்னும் நல்ல போயிருக்கும். இதை பாக்குறப்ப பாஷா படத்துல நான் பேசிய வசனம் தான் நியாபகத்திற்கு வருது ஆண்டவன் நல்லவங்களா சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ஆனா கெட்டவங்கள என்று சிரிப்புடன் முடித்தார் சூப்பர்ஸ்டார்.

Exit mobile version