Home CINEMA NEWS சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா…??? அடேங்கப்பா.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா…??? அடேங்கப்பா.

super singer junior 8 title winner

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி பெரிய அளவில் தமிழக மக்களின் இதயத்தில் இடம்பிடித்த நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் பல குழந்தைகள் தங்களது திறமையை காண்பித்து வந்தனர் பெரியவர்களே பாட தயங்கும் பாடல்களை மிகவும் இனிமையாக குழந்தைகள் பாடி பலரையும் கவர்ந்து வந்தார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவை அறிவிக்க சிறப்பு விருந்தினராக யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் அழைக்கப்பட்டு இருந்தார். டைட்டில் வின்னர் யார் என்பதை யுவன் தான் அறிவித்தார். சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கிரிஷாங்க் தான் டைட்டில் வின் செய்து உள்ளார் என்பதை யுவன் அறிவித்தார்.

கிரிஷாங்க் அவர்களுக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக பெற்றார். மேலும் ஒரு சர்ப்ரைஸ் என்ன வென்றால் யுவன் ஷங்கர் ராஜா தனது இசையில் கிரிஷாங்க்கை பாட வைப்பதாக கூறி உள்ளார்.

இரண்டாவது இடம் பிடித்த ரிஹானாவுக்கு 5 லட்சமும் மூன்றாம் இடம் பிடித்த நேஹாவுக்கு 3 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் தங்க காயின் பரிசாக வழங்கப்பட்டது.

Exit mobile version