Home CINEMA NEWS சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகைக்கும், ஜீ தமிழ் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் நடிகருக்கும் டும்...

சன் டிவி ‘கயல்’ சீரியல் நடிகைக்கும், ஜீ தமிழ் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் நடிகருக்கும் டும் டும் டும்…!!! கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.

Marriage

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “கயல்” தொடரில் நடித்து வருபவர் அபி நவ்யா மற்றும் ஜீ தமிழில் நடித்து வரும் தினேஷ் இருவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் ஒன்று ‘கயல்’, இந்த தொடரில் நடித்து வருபவர் அபி நவ்யா மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “என்றென்றும் புன்னகை” தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் தீபக் இருவருக்கும் நேற்று சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று உள்ளது.

நடிகர் தீபக் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ தொடரின் மூலம் சிலர் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவர் டிக் டாக் மூலம் பிரபலமான பின் சின்ன திரைக்குள் நுழைந்தார். நடிகர் தீபக் விஜய் டிவியில் புதிதாக தொடங்கியுள்ள ‘ஈரமான ரோஜாவே சீசன்2’ தொடரில் நடித்து வருகிறார்.

மேலும் அபி நவ்யா ஜெயா டிவியில் நியூஸ் அங்கராகவும் பணியாற்றியுள்ளார். நேற்று மாங்காட்டில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வருவதாகவும் காதல் விஷயம் அறிந்த இரு வீட்டார் பெற்றோர்கள் சம்மதத்துடன் நேற்று திருமணம் நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்தை கொண்டாடும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version