Home CINEMA NEWS 7G ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடித்தது இந்த பிரபல நடிகையா..!!! இவங்க நடிச்சி இருந்தா...

7G ரெயின்போ காலனி படத்தில் முதலில் நடித்தது இந்த பிரபல நடிகையா..!!! இவங்க நடிச்சி இருந்தா இன்னும் சூப்பரா இருந்துருக்குமோ.

subramaniyapuram swathi acted in 7g rainbow colony

செல்வராகவன் படம் என்றாலே வித்தியாசமான கதையாக இருக்கும். படத்திற்கு படம் கதையில் வித்தியாசம் காட்டும் செல்வராகவன் தன் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் கொடுப்பார்.

செல்வராகவனின் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னும் அந்த படத்திலிருந்து சில காட்சிகள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த அளவிற்கு தனது படைப்பை ரசிகர்கள் மனதில் பதிய வைப்பார்.

செல்வராகவன் இயக்கி ஏ எம் ரத்னம் அவர்களின் மகன் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி இந்தப் படம் ஒரு நேரத்தில் பல இளைஞர்களின் FAVOURITE படமாக இருந்தது.

காரணம் அந்தப் படத்தின் கதை அமைப்பு. ஒரு சராசரி இளைஞன் எப்படி இருப்பான் எப்படி பொறுப்பில்லாமல் இருப்பான் அவன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வரும் போது அதனை எப்படி எடுத்துக் கொள்வான் என்ற ஒன்லைனில் அழகான காதலையும் வைத்து எடுத்திருந்தார் செல்வராகவன். குறிப்பாக 7G படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரை கண்கலங்க வைத்தது.

செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி இப்படத்தில் முதலில் ஹீரோ ரவிகிருஷ்ணா அவர்களுக்கு பதில் நடிக்க இருந்தது நடிகர் மாதவன் அவர்கள் தானாம். மாதவன் அவர்கள் ஜோதிகாவுடன் பிரியமான தோழி என்ற பட சூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் மாதவன் அவர்களால் நடிக்க முடியவில்லையாம்.

அதன்பின் புதுமுக நடிகர்களை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்தாராம் அப்போது தான் தயாரிப்பாளர் மகனான ரவி கிருஷ்ணா வை பார்த்துள்ளார் செல்வராகவன் உடல் ஊதிப் போய் குண்டாக இருந்தாராம் இந்தப் படத்தில் கமிட்டாக போகிறோம் என்று தெரிந்தவுடன் கதிர் கதாபாத்திரத்திற்காக உடல் எடை குறைத்து வந்து நின்றாராம் ரவி கிருஷ்ணா.

அதன் பின் அனிதா கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் ஸ்வாதி அவர்கள் நடித்து வந்தாராம் ஷூட்டிங் நன்றாக சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் திடீர் என்று அவரால் ஒரு சில காரணங்களால் தொடர முடியவில்லையாம். அதன் பின் தான் அனிதா கதாபத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்தாராம். அப்படி உருவானது தான் 7ஜி ரெயின்போ காலனி.

Exit mobile version