Home NEWS நீட் தேர்வு நடக்குமா..? குழப்பத்தில் மாணவர்கள்…!!! ரெடியாக சொல்லும் திமுக அமைச்சர்.

நீட் தேர்வு நடக்குமா..? குழப்பத்தில் மாணவர்கள்…!!! ரெடியாக சொல்லும் திமுக அமைச்சர்.

NEET

அரசு பள்ளியில் நீட் தேர்வு பயிற்சி அமைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு வந்ததே ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தபோதுதான். அதிமுக ஆட்சியின் போது பள்ளிக் கல்வித் தறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தான் அரசு பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவே குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபின் நீட் தேர்வுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார். 2010 டிசம்பர் 27ல் தான் மத்திய அரசு மருத்துவ மற்றும் அதற்கான மேற்படிப்பு நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை பதிலளிக்குமாறு மத்திய அரசு தமிழகத்தை கேட்டுக்கொண்டது. அதன்பின் ஜனவரி 6ஆம் தேதி கருணாநிதியால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நுழைவுத்தேர்வுக்கு தடை பெறப்பட்டது.

2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இரண்டு தீர்மானங்கள் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு செய்துள்ளது.

Exit mobile version