Home NEWS வட்டிக்கு செல்போன் வாங்கி ஆன்லைனில் படிக்கும் மாணவி…!!! நாவல் பழம் விற்று கடனை அடைக்கும் மாணவி.

வட்டிக்கு செல்போன் வாங்கி ஆன்லைனில் படிக்கும் மாணவி…!!! நாவல் பழம் விற்று கடனை அடைக்கும் மாணவி.

online class

ஆன்லைன் கல்விக்காக வாங்கிய செல்போனுக்கு வட்டி கட்டுவதற்காக பிளஸ்டூ மாணவி நாவல் பழம் விற்பனை செய்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நைனாபட்டியை சேர்ந்த மாணிக்கம் ராதா தம்பதி மகள் அஞ்சுகா. கானாடுகாத்தான் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார்.

சென்ட்ரிங் தொழிலாளியான மாணிக்கம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் படிப்புக்காக வட்டிக்கு ரூ. 10 ஆயிரம் செல்போன் வாங்கியுள்ளார். அஞ்சுகா இதற்கு வாரம் ரூபாய் 1250 என பத்து வாரங்கள் கட்ட வேண்டும் என்பதால் பள்ளத்தூர் திருச்சி பைபாஸ் சாலையில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக் கொண்டே நாவல் பழம் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து அஞ்சுகா கூறுகையில் தந்தை இறந்ததால் நானும் எனது சகோதரரும் நொங்கு, நாவல் பழம் விற்பனை, வயல் வேலைக்கு செல்வது என கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். ஆன்லைன் கல்விக்காக வாங்கிய செல்போன் கடனை அடைக்க நாவல்பழம் விற்று வருகிறேன்.

எனது சகோதரரும் கண்மாய் கரையில் உள்ள நாவல் மரத்தின் பழங்களை பறிப்போம். அதன் பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாவல் பழம் விற்பனை செய்வேன். நேரம் போக மீதி நேரங்களில் படித்து கொள்வேன். தினமும் ரூபாய் 300 வரை கிடைக்கும் குடும்ப செலவு போக மீதம் உள்ளதை வைத்த கடனை அடைப்பேன்.

நன்றாக படித்த டாக்டர் ஆக வேண்டும் என்பது என் கனவு ஆனால் டாக்டருக்கு படிக்கும் அளவுக்கு பணம் இல்லை என்பதால் பிஎஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் என ஆசை என்றார்.

மாணவியின் உயர் கல்விக்கு உதவ நினைப்போர் 80565 252 13 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Exit mobile version