Home CINEMA NEWS ரெமோ படத்தின் இயக்குனருக்கு திருமணம்..!!! நேரில் சென்ற சிவகார்த்திகேயன்..!!! புகைப்படம் உள்ளே.

ரெமோ படத்தின் இயக்குனருக்கு திருமணம்..!!! நேரில் சென்ற சிவகார்த்திகேயன்..!!! புகைப்படம் உள்ளே.

remo director backiyaraj

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக பணிபுரிந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து படிப்படியாக உயர்ந்து இன்று தமிழில் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருப்பவர். இவர் தேர்வு செய்யும் படங்கள் நகைச்சுவை கலந்த கதையாக இருக்கும் இருக்கும்.

சிவகார்த்திகேயன் படம் நம்பி பார்க்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு வந்ததற்கு முதல் காரணமே இவருடைய ஹுமர் தான். ரஜினி , விஜய் படங்களை போன்று சிவகார்த்திகேயன் படத்தையும் பார்க்க குடும்பத்தோடு தியேட்டருக்கு வருகின்றனர் மக்கள்.

சிவகார்த்திகேயன் கேரியரில் பெரிய ஹிட் கொடுத்த படம் ரெமோ . கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார். ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார். சிவாவின் நடிப்பிற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

சிவகார்த்திகேயன் கூட ஒரு பேட்டியில் இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல இயக்குனர் பாக்யராஜ் அவர்களை சேரும் என்று புகழாரம் சூட்டியுள்ளார். நேற்று இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் திருமணம் நடைபெற்றது. அவரது திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் திருமணம் முடியும் வரை அங்கே இருந்தாராம்.

Exit mobile version