Home CINEMA NEWS டாக்டர் திரைவிமர்சனம்.

டாக்டர் திரைவிமர்சனம்.

doctor movie review

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் ரசிகர்களை திரையரங்குக்கு கொண்டு வந்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல வசூலைக் கொடுத்தது. அதன் பின் வெளிவந்த எந்த படமும் பெரிய அளவிற்கு கலெக்சன் கொடுக்கவில்லை என்பதே உண்மை தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படத்திற்கு மாஸ்டர் படத்திற்கு பிறகு பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது வாங்க படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கதை:

டாக்டர் வருண் ராணுவத்தில் டாக்டராக பணிபுரியும் சிவகார்த்திகேயன் தனக்கு பெண் பார்க்க வருகிறார் அந்த பெண் தான் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன். ஹீரோயின் குடும்பத்துக்கே சிவகார்த்திகேயனை பிடித்துப்போக சிவகார்த்திகேயன் பர்பெக்ட் ஆக இருப்பதால் ஹீரோயினுக்கு பிடிக்காமல் போகிறது அந்த நேரத்தில் தான் ஹீரோயின் அக்காவான காமெடி டைம் புகழ் அர்ச்சனா அவர்களின் மகள் கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட பின் என்ன நடக்கிறது டாக்டர் சிவகார்த்திகேயன் என்ன செய்கிறார் என்பதை சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

முதலில் இந்த படத்தை இயக்கிய நெல்சன் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் சமீபகாலமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை என்னடா படம் எடுக்கிறீங்க என்று அழ வைத்த இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரு சீரியசான கதையில் காமெடி காட்சிகளை வைத்து அதனை ரசிக்கும்படி சொல்லிய சிரிக்கவைத்த இவருடைய எழுத்தும் இயக்கமும் தரம்.

சிவகார்த்திகேயன் வழக்கமான சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இல்லாமல் மாறுபட்ட இறுக்கமான முகத்துடன் அதிகம் பேசாமல் நடிப்பில் அசத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன் டைமிங் டயலாக் மிஸ் ஆனாலும் அவரை சுற்றி உள்ள கதாபாத்திரங்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.

குறிப்பாக யோகிபாபு நீண்ட நாட்களுக்கு பிறகு யோகி பாபுவின் காமெடி ரசிகர்களை சிரிக்க மட்டும் அல்லாமல் கை தட்டவும் வைக்கிறது. கோலமாவு கோகிலாவில் படத்தில் நடுவில் சில இடங்களில் காணாமல் போன யோகி பாபு டாக்டர் படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை வருகிறார்.

அவருக்கு அடுத்து படத்தில் கவனிக்க வைத்தது ரெடிங் கிங்ஸ்லே அவர்களின் நகைச்சுவையான நடிப்பு மனிதன் பின்னி இருக்கிறார். பிரியங்கா அருள்முருகன் இவருக்கு டாக்டர் தான் தமிழில் முதல் படம் என்று சொல்லிவிட முடியாது அந்த அளவிற்கு இவருடைய நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது. பிரியங்காவின் நடிப்பு க்யூட்டான முகபவனை அனைத்தும் கமர்சியல் பட ஹீரோயின்களுக்கு உள்ள அதனை பொருத்தம் இவரிடம் இருக்கிறது. இளவரசு அர்ச்சனா அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

அனிருத் டாக்டர் படத்தின் முதுகெலும்பு என்றே கூறலாம் அந்த அளவிற்கு பின்னணி இசை பின்னிப்பெடல் எடுத்துள்ளார் . சில காட்சிகள் நடக்கும் இடத்தில் வரும் பின்னணி இசைகள் கண்டிப்பாக பலரது ரிங்டோனாக மாறும்.

வினய் மனுஷன் அசால்ட்டாக கூல் ஆக நடிப்பில் அசத்தி இருக்கிறார். இன்னும் ஹண்ட்ஸோம் குறையாத வினய்.

படத்தின் பிளஸ்

நெல்சன் திலீப்குமார் ஒரு ராவான திரைக்கதையில் நகைச்சுவை புகுத்தி கொண்டு சென்ற விதம். வேற மாரி நெல்சன்.

சிவகார்த்திகேயன் கதையின் அழுத்தத்தை புரிந்து கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

யோகி பாபுவின் ஒன்லனர் பெரிய அளவில் ஒர்க் ஆகி உள்ளது.

அனிருத்தின் பின்னணி இசை தரம்

படத்தின் ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்

இரண்டாம் பாதி நீளம் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

தயவு செய்து கமெர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்காதீர்கள். காமர்ஷியல் படங்கள் எடுப்பது ஒரு என்டேர்டைன்மெண்ட்காக மட்டுமே.

இரண்டாம் பாதியில் சில குறைகளை சரிசெய்து இருந்தால் செய்திருந்தால் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் ஒரு துப்பாக்கியாக அமைந்திருக்கும்.

இந்தக் கடினமான நேரத்தில் மொக்கை படங்கள் வந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க சரியான மாத்திரையை இந்த டாக்டர் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் டாக்டர் திரையரங்கிற்கு சென்று சிரித்து கொண்டாட வேண்டிய படம்

Verdict : சூப்பர் ஹிட்

ரேட்டிங்: 3 .25 /5

Exit mobile version