Home CINEMA NEWS அசால்ட்டாக 100 கோடியை வசூலில் நெருங்கும் சிவகார்த்திகேயனின் டான்..!!!

அசால்ட்டாக 100 கோடியை வசூலில் நெருங்கும் சிவகார்த்திகேயனின் டான்..!!!

sivakarthikeyan don movie collection

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களை என்டர்டைன் செய்வதால் இவருடைய படத்தை குடும்ப ரசிகர்களும் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

சொல்லப்போனால் ரஜினிக்கு பிறகு விஜய் பிடித்த மார்க்கெட்டை விரைவில் சிவகார்த்திகேயன் பிடித்தாலும் ஆச்சரியமில்லை. விஜயின் பார்முலாவை பின்தொடர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்று சினி வட்டாரத்தில் கூறுகிறார்கள். விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே கேரளாவில் ரசிகர்கள் அதிகம் சிவகார்த்திகேயனும் கேரள ரசிகர்களை டார்கெட் செய்து வருகிறார். தான் நடிக்கும் படத்தில் கேரளா நடிகர்கள் அல்லது மலையாள வசனங்களை வைத்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது #SK 20 மூலம் தெலுங்கு ரசிகர்களையும் டார்கெட் செய்கிறார். தன்னுடைய பிசினஸை விரிவுபடுத்த பக்காவாக ஸ்கெட்ச் போட்டு இறங்கியிருக்கும் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக அடுத்த விஜய் ஆக வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்தால் நன்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று புரிந்துகொண்டு சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க முன் வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நல்ல வசூல் செய்து தியேட்டர் உரிமையாளர்களை சந்தோஷப்படுத்தியது சொல்லப்போனால் மாஸ்டர் படத்திற்கு பிறகு டாக்டர் திரைப்படம் தான் ஓரளவிற்கு நல்ல வசூல் செய்தது தியேட்டருக்கு பலர் குடும்ப ரசிகர்களை கொண்டு வந்தது.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான DON திரைப்படம் கிட்டத்தட்ட நண்பன் படத்தின் டெம்பிளேட் மாதிரி இருந்தாலும் சிவகார்த்திகேயனின் கலகலப்பான நடிப்பு துள்ளலான நடனம் நகைச்சுவை என்று அவருடைய அக்மார்க் விஷயங்கள் படத்தை கலகலப்பாக எடுத்துச் சென்றது. கடைசியில் 40 நிமிடம் இந்த காலத்துக்கு தேவையான முக்கிய மெசேஜ் ஒன்றை சொல்லி கண்கலங்கி தியேட்டரை விட்டு வெளியில் வந்தார்கள் ரசிகர்கள்.

டான் திரைப்படம் இதுவரை 75 கோடியைத் தாண்டி கலெக்ட் செய்துள்ளதாகவும் விரைவில் 100 கோடியை அசால்டாக தொட போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவேளை டான் திரைப்படம் இன்னும் சில நாட்களில் நல்ல வசூல் செய்தால் நிச்சயம் சிவகார்த்திகேயனின் இரண்டாவது 100 கோடி திரைப்படம் DON ஆக இருக்கும் அது போல இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி முதல்படமே 100 கோடியை வசூல் செய்த படமாக இருக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள் சினி வட்டாரத்தில்.

Exit mobile version