Home CINEMA NEWS ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் 92வது வயதில் உடல்நலக்குறைவால் இன்று...

‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் 92வது வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்…!!!

latha mangeshkar

இந்திய சினிமாவில் பிரபல பாடகியும் பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மெல்லிய குரலில் பாடல்களை பாடி மக்கள் மத்தியில் இன்றளவும் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் இவர் தலைசிறந்த பின்னணி பாடகியாக தனது மெல்லிசையால் வாழ்ந்துள்ளார்.

இவர் இந்திய சினிமாவில் பெரும்பாலான பாடகர்கள் உடன் ஹிந்தி சினிமாவில் பாடியுள்ளார். மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பது தெரிந்தது இதை அடுத்த பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர்களிடம் லதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் வென்டிலேட்டர் இல்லாமல் அவர் நன்றாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்து உள்ளதாகவும் அவர் கவலைக்கிடமாக உள்ளதால் வேண்டிய இடத்தில் வைக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.

இவரது மறைவிற்கு நாடு முழுவதும் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001 பெற்றுள்ள லதா மங்கேஷ்கர் 1999ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மாநிலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் உடல் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு மதியம் 12:30 மணி அளவில் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை 6 மணி அளவில் இறுதி மரியாதை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதோடு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே லதா மங்கேஷ்கரின் இறுதி மரியாதை முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

Exit mobile version