Home CINEMA NEWS பிரபல பாடகர் கே கே அவர்களின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ…!!! இசையோடு...

பிரபல பாடகர் கே கே அவர்களின் மரணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ…!!! இசையோடு சென்ற உயிர்..!!! வருத்தத்தில் ரசிகர்கள்.

krishnakumar kunnath last video

கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) இவர் தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரகுமான் இசையில் காதல் தேசம் என்ற படத்தில் மூலம் பாடகராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கேகே மின்சார கனவு படத்தில் ஸ்டாபெர்ரி கண்னே பாடல் பாடியவர் அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு சூப்பர் ஹிட் பாடலான அப்படி போடு பாடலை பாடியவரும் அவரே. ரகுமானுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் தொடர்ந்து பாடிவந்த கேகே அவர்கள் தான் சூர்யாவின் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலை பாடியவர். அதுமட்டும் அல்ல பிரமாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலை பாடியவர் இவர்தான்.

கிட்டத்திட்ட இதுவரை 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். கிருஷ்ணகுமார் அவர்கள் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு பாடி வந்தார் அந்த நேரத்தில் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போக திடீரென்று அவர் தங்கும் விடுதிக்கு திரும்பியுள்ளார்.

திரும்பிய சில நிமிடங்களிலேயே கிருஷ்ணகுமார் அவர்களின் உயிர் பிரிந்துள்ளது. அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு கிருஷ்ணகுமார் ஏற்கனவே இறந்துவிட்டார் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர்.

தற்பொழுது கேகே அவர்கள் கலந்துகொண்ட கல்லூரி விழாவில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது அதில் அவர் பாடிக் கொண்டிருக்கும் போது வியர்வை அதிகமாக இருந்துள்ளது. அடிக்கடி துணியை வைத்து வியர்வையை தொடைத்து கொண்டுள்ளார். அப்போது கேகே அவர்கள் ஏன் ஏசி வேலை செய்யவில்லை என்று கேட்டுள்ளார் இது வீடியோவில் பதிவாகியுள்ளது.

காற்றோட்டமான சூழல் இல்லாததால் தான் அவருடைய இறப்புக்கு காரணம் இன்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கூறிவருகின்றனர்.

Exit mobile version