Home NEWS “கசடதபற” 6 கதைகள் வித்தியாசமான முயற்சியில் சிம்புதேவன்…!!! திரைவிமர்சனம்.

“கசடதபற” 6 கதைகள் வித்தியாசமான முயற்சியில் சிம்புதேவன்…!!! திரைவிமர்சனம்.

kasadathapara

இது ஆந்தாலஜி படங்களின் சீசன். சிம்புதேவன் இயக்கியுள்ளார். 6 கதைகள் என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது. ஒருவர் செய்யும் காரியம், அவரை தொடர்ந்து பலருடனும் சம்பந்தப்பட்டது என்பது ஒன்லைன். ஒரு கதைக்குள் வரும் கேரக்டர்கள், இன்னொரு கதைக்குள் வந்து செல்லும் பாணியில் உருவாகியுள்ளது.

நல்லது மட்டுமே செய்யும் பிரேம்ஜி, மருந்து கம்பெனியில் பணிபுரிகிறார். அங்கு வரும் ஒரு முக்கிய தபால், தவறுதலாக பிரேம்ஜி கைக்கு கிடைக்கிறது. அந்த தபால்தான் அவருடன் வேலை செய்யும் மற்றொரு ஊழியரான வெங்கட் பிரபு வாழ்க்கையை மாற்றுகிறது. போலீஸ் துறைக்குள் சாதி வெறி, சொந்த குடும்பத்திற்குள் துரோகம்,

குறுக்குவழியில் கோடீஸ்வரனாகும். இளைஞன், அப்பாவி இளைஞனின் காதல், மகனை காப்பாற்ற போராடும் தாய், கார்ப்பரேட் நிறுவனம் தப்பிக்க அப்பாவி குடும்பஸ்தன் பலியாகும் சதி என்று 6 கதைகள் இடம்பெற்றுள்ளது. சில கதைகள் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யம் தருகிறது. சில கதைகள் இன்னொரு படத்தை நினைவூட்டுகிறது.

நீண்ட நாவல் படித்த அயர்ச்சி ஏற்படு கிறது. படமாக்கலில் பிரேம்ஜி கதை மட்டும் மனதில் நிற்கிறது. சந்தீப் கிஷன் பிரியா பவானி ஜோடி என்ன ஆனது? ஹரீஷ் கல்யாண் பிழைத்தாரா என்பதை சொல்லவில்லை. ஹரீஷ் கல்யாண். கதையில் நாடகத்தனம் அதிகம். சோனி லைவ் வெளியீடு.

Exit mobile version