Home CINEMA NEWS ஒரே படத்தில் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிம்பு …!!! பவர்புல் கம்பாக்.

ஒரே படத்தில் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிம்பு …!!! பவர்புல் கம்பாக்.

dhanush simbu

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றி நடை கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நீண்ட பிரச்சனைகளுக்குப் பிறகு வெளியானாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த வசூல் சாதனை செய்து வருகிறது.

தமிழில் இதுவரை பெரிதளவு டைம் லூப் கதையை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி மிகவும் புத்திசாலித்தனமான கதை களம் அமைத்த வெங்கட் பிரபுவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கதாபாத்திரத்தில் இவரைத் தவிர வேறு எவர் நடித்திருந்தாலும் இந்த அளவிற்கு வருமா என ரசிகர்கள் என்னும் அளவிற்கு அவர் நடிப்பு பாராட்டுகளை குவித்து வருகிறார். இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபி 10 க்கு / 9 . 6 ரேட்டிங் பெற்றுள்ளது.

மாநாடு திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ.7 கோடி வசூலித்த நிலையில் இரண்டாவது நாள் சுமார் ரூ.15 கோடியை வசூலித்து உள்ளது. மாநாடு திரைப்படத்தின் வசூலை அதிகார பூர்வமாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. இதைத்தொடர்ந்து மாநாடு திரைப்படம் இதுவரை ரூபாய் ரூ.75.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் 2021 ஆம் ஆண்டு வெளியான அதிக வசூல் செய்த ஐந்து படங்களில் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த ஆண்டு வெளியான தனுஷின் கர்ணன் திரைப்படம் ரூ.70 கோடியை வசூல் செய்திருந்தது. இந்த வசூலை தாண்டி சென்றுள்ளது மாநாடு திரைப்படம்.

இந்த வருடத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரூபாய் ரூ.250 கோடியை பெற்று முதலிடத்திலும், அண்ணாத்த திரைப்படம் ரூ.150 கோடி உடன் இரண்டாவது இடத்திலும், டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி உடன் 3-வது இடத்திலும், மாநாடு திரைப்படம் ரூ.75.50 கோடியுடன் நான்காவது இடத்தையும், கர்ணன் திரைப்படம் ரூ.70 கோடி வசூலுடன் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது. சிம்புவின் மாநாடு திரைப்படம் டாக்டர் திரைப் படத்தின் வசூலை தாண்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Exit mobile version