Home CINEMA NEWS திருமணம் சீரியல் ஜோடியின் சித்து – ஸ்ரேயா திருமண புகைப்படங்கள்…!!!

திருமணம் சீரியல் ஜோடியின் சித்து – ஸ்ரேயா திருமண புகைப்படங்கள்…!!!

sidhu shreya

சின்னத்திரை ஜோடிகளில் சித்து ஸ்ரேயா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் எனும் தொடரில் கதாநாயகனாக அறிமுகமானார் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக அறிமுகமானார் ஸ்ரேயா.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சித்து ஸ்ரேயா ஜோடி ரசிகர்களால் பெரிதும் கவர்ந்தனர். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இருவருக்குமே தனி தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. மேலும் ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் இருவருமே மௌனமாக இருந்தனர்.

ஆனால் ரசிகர்கள் இருவருடைய புகைப்படத்தை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தன. மேலும் அதன்பிறகு இருவரும் தனது காதலை ரசிகர்களிடம் வெளிப்படையாக கூறினர். அதோடு இருவரும் லிவிங் டுகெதர் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

அதோடு நடிகர் சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியல் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தொடரில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சித்து ஸ்ரேயா திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version