Home NEWS கோவை உணவகத்தில் உள்ளே புகுந்து வாடிக்கையாளர்களை லத்தியால் அடித்த எஸ். ஐ. முத்து இடம் மாற்றம்..!!!...

கோவை உணவகத்தில் உள்ளே புகுந்து வாடிக்கையாளர்களை லத்தியால் அடித்த எஸ். ஐ. முத்து இடம் மாற்றம்..!!! பொது மக்களை அடிக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்.

si muthu lathi charge cctv

கொரோனா அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுத்து வரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கு பிறப்பித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதினால் ஊரடங்கு இல்லாமல் ஒரு சில சிறிய விதிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு.

அந்த அறிவிப்பில் இரவு பதினோரு மணிவரை மட்டுமே சினிமா தியேட்டர்கள், தேநீர் கடைகள் மற்றும் ஹோட்டல்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்த இந்த கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் 50% சதவீத வாடிக்கையாளர்களுடன் சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள் போன்றவை இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோவையில் ஊரடங்கு காரணம் காட்டி ஹோட்டலுக்குள் புகுந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் அங்கு உணவு அருந்திக்கொண்டு இருந்த பெண் ஒருவரையும் மேலும் மூன்று பேரையும் லத்தியால் அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து பகுதியில் மோகன் ராஜ் என்பவர் ஸ்ரீ ராஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார் இந்த ஹோட்டல் தமிழக அரசின் உத்தரவின்படி இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கப்பட்டு இயங்கி வருவதாக அந்த ஹோட்டலின் உரிமையாளர் கூறிவருகிறார்.

நேற்று இரவு பத்து இருபது மணிக்கு ஓசூரில் இருந்து வந்த பயணிகள் பசிக்கிறது என்று அவர்கள் கூறியதை கருத்தில் கொண்டு ஹோட்டலில் ஷட்டர் பாதி அளவு அடைக்கப்பட்டிருந்தது. அந்நேரத்தில் அந்த நேரசத்தில் அவ்வழியாக வந்த காட்டூர் காவல் நிலைய எஸ் ஐ முத்து ஹோட்டலின் உள்ளே நுழைந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை லத்தியால் தாக்கினார்.

எஸ் ஐ முத்து லத்தியால் தாக்கியதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும் மற்றொரு வகையிலும் என நாலு பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் அளித்துள்ள புகாரின் பெயரில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் எஸ்ஐ முத்துவை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

லத்தியால் அடித்து மிகப்பெரிய தவறு என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version