Home CINEMA NEWS விஜய் ரசிகரிடம் விஜயை பற்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்..!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள். அப்படி என்ன...

விஜய் ரசிகரிடம் விஜயை பற்றி சொன்ன பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்..!!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள். அப்படி என்ன சொன்னார் தெரியுமா?

thalapathy vijay sharukhan

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்தியாவில் இவருக்கு பெரிய ரசிகர் படையே உள்ளது. ஹிந்தி மொழி நடிகர் என்றாலும் அனைத்து மொழி மக்களாலும் இவருடைய படங்கள் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

ஷாருகான் அவர்கள் சில வருடங்களுக்கு முன் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார் அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய்க்கு அவரது கையால் விருது ஒன்றை கொடுத்து விட்டு நான் விஜய் உடன் ஆட ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

அதற்கு விஜய்யும் வெட்கப்பட்டு சிரித்து கொண்டு ஷாருகான் அவர்களும் தளபதி விஜயை அவர்களும் நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நடனமாடி முடித்தவுடன் விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பை பரிமாறிக் கொண்டார் ஷாருக்கான்.

விஜயின் வளர்ச்சியை பார்த்து வரும் ஷாருகான் அட்லி உடன் விரைவில் படம் பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது.

தற்பொழுது ஷாருக்கான் தனது ரசிகர்களிடம் ட்விட்டரில் உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது ரசிகர் ஒருவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் ஸ்டில் ஒன்றை பதிவிட்டு தளபதி விஜயை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கூறியதற்கு ஷாருகான் VERY COOL என்று அவர் பதிலளித்துள்ளார்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் விஜய்யை புகழ்ந்து இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Exit mobile version