Home CINEMA NEWS ஐபோன் விவகாரத்தில்… திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாகிய ஷாலு ஷம்மு..!!!

ஐபோன் விவகாரத்தில்… திருடிய நண்பனை கண்டுபிடித்து வெளுத்துவாகிய ஷாலு ஷம்மு..!!!

சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த பார்ட்டியின் போது மாயமான நடிகை ஷாலு ஷம்முவின் ஐபோன் அவரது வீடு தேடி பார்சலில் வந்தது. பல்வேறு தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. கடந்த 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு எம் ஆர் சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார்.

பிறகு பார்ட்டி முடிந்து தனது தோழிகளுடன் சூளைமேட்டில் தங்கினார். மறுநாள் காலையில் நடிகை ஷாலு ஷம்மு தன் பையில் பார்த்தபோது அவரது ஐபோன் காணவில்லை. இது குறித்து பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் நட்சத்திர ஹோட்டலில் பார்த்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இதற்கு இடையே நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் எனது வீட்டிற்கு டன்சோ டெலிவரி நிறுவனத்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. யார் அனுப்பியது என்று விபரங்கள் இல்லாமல் வந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் மாயமான எனது விலை உயர்ந்த ஐபோன் இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். திருடியதாக நான் யாரை சந்தேகப்பட்டேனோ அந்த நண்பர் தான் எனது ஐபோனை திருடி உள்ளார்.

8 ஆண்டுகால நட்பு வீணானது இனி யாரை நம்புவது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார். விசாரித்து வரும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க போனை திருடியவர் திருப்பி அனுப்பி இருக்கிறார். இது குறித்து பார்சல் டெலிவரி செய்த நிறுவன அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version